பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7 இன்றைய நாளில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மெட்ஸ் அனைவருக்கும் ராசி பலன் கூறுகிறார் கூல் சுரேஷ்.
ராசி பலன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை விசித்ராவின் காலில் விழுந்து கூல் சுரேஷ் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்கிறார். இவை அனைத்தும் நகைச்சுவையாக நடக்கிறது.
கண்கலங்கிய மாயா
பின் ராசி பலன் கூறும்போது மாயா குறித்து நகைச்சுவைக்காக சில விஷயங்களை கூல் சுரேஷ் கூறுகிறார். இதனால் வருத்தப்படும் மாயா என்ன பற்றி நீங்கள் பேசி நிறைய விஷயங்கள் எனக்கு பிடிக்கவில்லை என கூறிவிட்டு, அறைக்கு செல்கிறார்.
அங்கு சென்றபின் திடீரென கண்கலங்கி அழுகிறார் மாயா. இதுவரை அதிரடியாக ஆட்டத்தை ஆடி வந்த மாயா திடீரென கண்கலங்கும் இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த முதல் ப்ரோமோ வீடியோ..