3 நாட்களில் திருமணம்! 8 மாத கர்ப்பிணி மணப்பெண் மர்ம மரணம்…

0
318

இன்னும் 3 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் 8 மாத கர்ப்பிணி மணப்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காதல்

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நரேஷ்குமார் (28). இவரும் சுஷ்மிதா (21) என்ற பெண்ணும் மூன்றாண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சுஷ்மிதா கர்ப்பமானார்.

7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சுஷ்மிதா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறி நரேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். வருகிற 12-ம் திகதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சுஷ்மிதா கடந்த 1½ மாதமாக நரேஷ் குமாரின் வீட்டில் தங்கி இருந்தாா். இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கணவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மரணம்

தனது காதலி சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த நரேஷ்குமார் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சுஷ்மிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.