அலரி மாளிகைக்கு முன்னால் கடற்படையினர் குவிப்பு!

0
768

அலரி மாளிகையைச் சுற்றி பெருமளவான ஆயுதம் ஏந்திய கடற்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

குறித்த பதுதியை அண்மித்த இடங்களில்  காணப்பட்ட வாகனங்கள் முதலானவற்றை அடித்து நொறுக்கி தீயிட்டு எரித்துள்ளதாகவும், இதன் காரணமாக நிலைமை தீவிரமடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எமது  செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நிலைமை தீவிரமடைந்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.