இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் மனோ கணேசன்!

0
513

இலங்கைககான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்க்கும்,(Julie Chung) தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் (Mano Ganeshan) இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் (23-08-2022) இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம், தமிழர் தேசிய பிரச்சினை, தேசிய அரசாங்கம், தேசிய பொருளாதார நெருக்கடி, புலம் பெயர் தமிழர் விவகாரம், நலிவுற்ற பெருந்தோட்ட மக்கள் பிரச்சினைகள் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த தகவல் எம்.பி மனோ கணேசன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.