பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் நமச்சிவாயம்

0
450

புதுச்சேரி காங்கிரஸ் அரசில், பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தார். அவருடன் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தானும், தன் பதவியை ராஜினாமா செய்தார். இவர்கள் பாரதிய ஜனதாவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாயின.

நேற்று நமச்சிவாயமும், தீப்பாய்ந்தானும் தனது ஆதராவளர்களுடன் டெல்லி சென்றனர். இன்று (28.1.2021) டெல்லியில் பாரதிய ஜனதாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு ஜே.பி. நட்டா வாழ்த்து தெரிவித்தார்.