தனமல்வில வாரச் சந்தை வளாகத்தில் நபரொருவர் கொலை!

0
684

தனமல்வில வாரச் சந்தை வளாகத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வார சந்தைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கித்துல்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத அதேவேளை, மேலதிக விசாரணைகளை தனமல்வில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.