அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரங்கல்ல பகுதியில் உள்ள பண்ணையொன்றில் சட்டவிரோதமாக 1,900 லீற்றர் டீசல் சேமித்து வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு தொடர்பாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கலேன்பிந்துனுவெவ பொலிஸ் அதிகாரிகள்
நேற்யை தினம் சோதனை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது அப்பகுதியில் உள்ள கால்நடை பண்ணையொன்றில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார்
1,900 லீற்றர் டீசல் அடங்கிய 10 பீப்பாய்களை பொலிஸார் கண்டுபிடித்தனர். சம்பவம் தொடர்பாக கோமரங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




