இலங்கை வருகின்றார் மாலைத்தீவு ஜனாதிபதி

0
43

மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, ​​மாலைத்தீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தார்.

மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இந்த உரையாடல் இடம்பெற்றதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான மாலைத்தீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமத் கினாவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.