நாட்டிலிருந்து தப்பியோடிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக மாலைத்தீவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்குள்ள மக்களும் கொதித்தெழுந்துள்ள நிலையில் மக்களை கட்டுப்படுத்த அந்நாட்டு இராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
மாலைத்தீவில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக வெளியேற்றுமாறும் அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சின் வீசா அனுமதி கிடைக்கும் வரைக்கும் தற்காலிகமாக தஞ்சம் வழங்குமாறு கோரி சிங்கப்பூருக்கு செல்லவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.




இலங்கையர் கைது
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளதாக மாலைதீவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
