ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த மலையாள நடிகர்

0
108

மலையாள நடிகர் திலீப் சங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் லோரன்ஸ் சந்திப்பு அருகிலுள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார் திலீப். சுமார் இரண்டு நாட்களாக அறையிலிருந்து திலீப் வெளியில் வராததோடு அறைக்குள் துர்நாற்றமும் வீசியுள்ளது. சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது திலீப் சடலமாக தரையில் கிடந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக வந்த பொலிஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின்போதே அவர் இறப்புக்கான காரணம் என்னவென்று தெரிய வரும். இவரது இறப்புக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.