பிக்பாஸ் வீட்டில் ‘விக்ரம்’ படத்தின் ரகசியத்தை உடைத்த மைனா!

0
621

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மகேஸ்வரி மற்றும் மைனா ஆகிய இருவருமே நடித்து இருந்தனர் என்பதும் இருவருமே விஜய் சேதுபதியின் மனைவிகளாக நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் சக போட்டியாளர்களிடம் மைனா பேசிக்கொண்டிருக்கும்போது ‘விக்ரம்’ படத்தின் ஒரு காட்சியின் ரகசியத்தை போட்டு உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘விக்ரம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து மைனா கூறுகையில் ’விஜய் சேதுபதி இருந்த வீடு உண்மையான வீடு தான் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் போதைப்பொருள் உருவாக்கும் லேப் மட்டும் தனியாக செட் போட்டு எடுக்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால் படத்தில் வீடும் லேபும் ஒரே இடத்தில் இருப்பது போல் காண்பிக்கப்பட்டு இருக்கும்.

அதே போல் விஜய் சேதுபதி வீடு இடியும் பாம் காட்சியை எடுக்கப்பட்டபோது அது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சியாக தான் இருக்கும் என்றும் சும்மா நாங்கள் அதிர்ச்சி அடைவது போல் ஆக்ஷன் கொடுத்தால் போதும் என்றுதான் நினைத்தோம். அனைவரும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் கூறிய போது நாங்கள் கண்ணை மட்டும் மூடிக் கொண்டிருந்தோம். ஆனால் உண்மையாகவே குண்டுவெடித்து எங்கள் வாய்க்குள் கரும்புகை போனது என்றும் அது ’பிரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு போல அனைவரும் மாறிவிட்டோம் என்று சொல்லி அவர் கூற அனைவரும் சிரித்தனர்.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பு குறித்து அவர் கூறியபோது வில்லத்தனத்திற்காக அவர் தனியாக நடிப்பைக் கற்றுக் கொண்டு ஒவ்வொரு அசைவையும் மிருகத்தனமாக கொடுத்து இருந்தார் என்றும் குறிப்பாக ஒரு ஷாட்டில் திரும்பும் போது ஆந்தை போல கழுத்தை திருப்பி பார்ப்பார் என்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரகசியத்தையும் மைனா கூறினார்.