முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்திய காணியே இம்புல்கொட பெளத்த தியான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இது தொடர்பில் பொது மக்கள் தொடர்ந்தும் முறைப்பாடு செய்து வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த காணியில் புதையல் இருப்பதாக நம்பி அதனை கையகப்படுத்தியுள்ளதாகவும் காணியின் உரிமையாளர்களை கண்டறியும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.