நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பயாகலயில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டுக்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஷவை காண்பதற்காக அவரது ஆதரவாளர்கள் வருகை தந்ததாகவும் அறியமுடிகிறது.
விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்குச் சென்ற பின் மஹிந்த ராஜபக்ஷ வெளியில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவென கூறப்படுகிறது.