மகிந்தவால் இனியும் நடுநிலை அரசியலுக்கு தலைமை  தாங்க முடியாது – வாசுதேவ நாணயக்கார

0
316

மகிந்த ராஜபக்சவுக்கு இனிமேல் நடு நிலையான அரசியல் நிரோட்டத்திற்கு தலைமை தங்கி பயணிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குருவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இடதுசாரி நிலைப்பாடுகளை கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச நடுநிலையான அரசியல் நிரோட்டத்தில் பயணித்தார். அரச அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினார்.

ஆனால், வலதுசாரி தாராளமய அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் மடியில் மகிந்த ராஜபக்ச தற்போது அமர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக அவர் நடுநிலையான கொடியை ஏந்தி செல்ல முடியாது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.