பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்குப்போட்டு தற்கொலை!

0
645

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழ் திரையுலகினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கபிலனின் மகளான 28 வயதான தூரிகையே இவ்வாறு செய்துகொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாடலாசிரியர் கபிலன் பொன்னியின் செல்வன், பிசாசு, சார்பட்டா பரம்பரை உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் | Caused Tragedy In The Tamil Film Industry

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.