தமிழ் சினிமாவில் ஐய்யா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அளவிற்கு உச்சத்தில் இருந்து வருபவர் நடிகை நயன் தாரா.
பல சர்ச்சைகளுக்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து வரும் நயன் தாரா சமீபத்தில் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றார்.

இறைவன்
இதன் ஜவான் படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். 75 படம் ஆரம்பிப்பதற்கு முன்பே அவரது பிறந்த நாளில் நயன் தாரா 81 படத்தின் அப்டேட்டும் வெளியானது.

இப்படி பிஸியாக இருந்து வரும் நயன் தாரா தனி ஒருவன் படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவியுடன் அஹமத் இயக்கத்தில் இறைவன் படத்தில் நடித்து வந்தார். இப்படம் அடுத்த ஆண்டு விரைவில் வெளியாகவுள்ளது.
நெட்பிளிக்ஸ்
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் கைப்பற்றியிருக்கிறது. சுமார் 30 கோடிக்கும் இறைவன் படத்திற்கு டிஜிட்டல் உரிமையை விற்றுள்ளார்கள்.

ஏற்கனவே, நயன் தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தினை எடுத்து வெளியிட 25 கோடி கொடுக்கப்பட்ட நிலையில் அந்த வீடியோ இன்னும் வெளியாகமல் கிடப்பில் இருக்கிறது. அதேபோல் இந்த படத்தை 30 கோடிக்கு வாங்கியிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.