திருமணத்திற்கு தயாரான நிலையில் விபத்துக்குள்ளான காதலர்கள் – ஸ்தலத்திலேயே காதலி பலி

0
175

பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த காதலர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் காதலி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காதலன் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

மாலபேயில் வசிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன பிரதிநிதியான கோஷனி அலோக்யா என்ற 25 வயதான இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலர்கள்

காதலர்கள் இருவரும் பாதுக்க பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு கொடகமவில் இருந்து மாலம்பே நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இதன் போது பனாகொட இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள வீதி திருத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து முன்னால் வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றவுடன் இருவரும் அணிந்திருந்த தலைக்கவசம் கிழே விழுந்துள்ளது. இதனால் பெண்ணின் தலையில் பலத்த காயமடைந்து பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருமண தயாரான நிலையில் விபத்துக்குள்ளான காதலர்கள் - ஸ்தலத்தில் பலியான காதலி | Lover Dies In Accident

நிச்சயதார்த்தம்

இளைஞனின் வலது கால், வலது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய இந்த காதலர்கள் இருவரும் எதிர்வரும் ஒரிரு நாளில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்த இருவர் எனவும் தெரியவந்துள்ளது.

நிச்சயதார்த்த தேவைக்காக திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் விபத்திற்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.