ஹமாஸ் அமைப்பினரால் இழுத்துச் செல்லப்பட்ட காதலிக்காக காத்திருக்கும் காதலன்! (மனதை உருக்கும் பதிவு)

0
200

இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக கடல் மற்றும் வான்வழியே தாக்குதலை தொடுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பலரை பணய கைதிகளாகவும் பிடித்து சென்றுள்ளது.

இந்த தாக்குதலில் இசை திருவிழாவில் கலந்து கொண்ட 260 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி சென்றனர். 210 பேரை சிறை பிடித்து சென்றனர்.

இஸ்ரேலின் ஹைபா நகரை சேர்ந்த அவர் ஓவிய மாணவியான இன்பார் ஹைமன் (வயது 27) இசை திருவிழாவின்போது, தன்னார்வலராக கலந்து கொண்ட போது ஹமாஸ் தாக்குதலின்போது மற்றவர்களோடு சேர்ந்து தப்பி செல்ல முயன்றார்.

கொடூர தாக்குதல் தொடங்கியதும், பின்னணியில் துப்பாக்கி சூடு சத்தத்துடன் மக்கள் அலறியடித்தபடி, வயல்வெளி பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை நோக்கி ஓடினர்.

ஆனால், ஹைமனை பயங்கரவாதிகள் பிடித்து விட்டனர்.அவருடைய 2 நண்பர்கள் இதில் தப்பி விட்டனர். மோட்டார் பைக்குகளில் வந்த பயங்கரவாதிகள் அவரை பிடித்து இழுத்தபடி சென்றனர்.

ஹமாஸ் அமைப்பினரால் இழுத்துச் செல்லப்பட்ட காதலிக்காக காத்திருக்கும் காதலன்! | A Lover Waiting For Girlfriend Dragged Away Hamas

இந்த வீடியோ வைரலானதும், காதலியை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய காதலர் நோவாம் ஆலன் (வயது 24) அதிகாரிகளை விடாமல் சந்தித்து பேசி வருகிறார்.

ஆலன் கூறும்போது, அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், இரக்கம் காட்டுங்கள். அவளை உயிருடன் வைத்திருங்கள். அதிகம் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும். பணய கைதிகளுக்கு உணவு, நீர் மற்றும் மருந்துகளை கொடுங்கள். கவனம் செலுத்துங்கள் என வேண்டுகோளாக கூறியுள்ளார்.

பணய கைதிகள் மீட்புக்கே இஸ்ரேல், இங்கிலாந்து அரசுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதுவே மிக அவசியம்.

எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது தரைவழி தாக்குதலுக்கு முன்பும் அவர்கள் திரும்ப வேண்டும் என்று ஆலன் கேட்டு கொண்டுள்ளார்.

நிச்சயம் அவள் திரும்பி வருவாள். ஆனால், முடிந்தவரை நாமும் அவள் திரும்புவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலன் கூறியுள்ளார்.