நீண்ட காலமாக இடம்பெற்ற சூதாட்டம்; 28 பேர் கைது

0
279

தினமும் பணத்திற்காக சட்டவிரோதமாக ஒன்று கூடி சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இந்து மயானம் அருகில் உள்ள வெற்றுக்காணிகளில் சிலர் தொடர்ச்சியா சூதாடுவதாக பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

பெரியநீலாவணை பொலிஸார் எடுத்த நடவடிக்கை

அந்த முறைப்பாட்டிற்கு அமைய சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து 28 சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (9) மாலை கைது செய்தனர்.

கைதான அனைவரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக இடம்பெற்ற சம்பவம்; 28 பேர் அதிரடியாக கைது | Peoples Gambling Arrest

அத்துடன் எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் பெரிய நீலாவணை பொலிஸார் குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.