விஜய் பேசிய ஆபாச வார்த்தைகள்; பொறுப்பேற்ற லோகேஷ் கனகராஜ்

0
222

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‛லியோ’ திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. இதில் விஜய் பேசிய ஆபாச வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பலரும் அந்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ”படத்திற்கு தேவைப்பட்டதால் டிரைலரில் அந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது. அப்பாவியான ஒருவர் தான் இருந்த அழுத்தமான மனநிலை சூழலில் பேசியுள்ளதை காட்சிப்படுத்தி இருக்கிறேன்.

அந்த வார்த்தையால் யாரின் மனது புண்பட்டாலோ, யாரேனும் கண்டனத்தை தெரிவித்தாலோ அதற்கு முழு பொறுப்பு நானே. அதற்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவ்விவகாரத்தில் தயக்கம் இருந்ததும் என்னிடம் மீண்டும் கேட்டார். நான் கூறியதால் அதனை பேசினார்” என கூறினார்.