அரச வெளியீட்டு விற்பனை நிலையத்திற்கு பூட்டு

0
211

நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வெளியீட்டு விற்பனை நிலையம் ஏப்ரல் 15 ஆம் திகதி மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

கையிருப்பு மற்றும் சில உள் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மறுநாள் (16) வழக்கம்போல் கருமபீடம் திறக்கப்படும்.