பாடகி சுசித்ரா நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் பிரபலம் மாய கிருஷ்ணன் குறித்து பேசியுள்ளார்.
மாயா கிருஷ்ணன்
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ‘வானவில்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாயா கிருஷ்ணன் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இவர், தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் நடிகர் கமலின் விக்ரம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்ததன் மூலம் மாயா பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதமும், பேச்சும், செயல்களும் ரசிகர்கள் பலருக்கும் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் மாயா மீது, முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான பாடகி சுசித்ரா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முனைவைத்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த வருகிறார்.
சுசித்ரா கேள்வி?
அதில் ஒரு பேட்டியில் சுசித்ரா பேசியதாவது “மாயாவை எதிர்த்து கேள்வி கேட்கவும் மாயா பற்றி பேசவும் கமல் ஏன் பயப்படுறாரு என்றே தெரியவில்லை. மாயாவின் குடும்பத்துக்காக கமல் பயப்படுகிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது. பி
ரதீப் ஆண்டனி விவகாரத்தில் கூட மற்றவர்களை கேள்வி கேட்டது போல மாயாவை பார்த்து கமல் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் லியோ படங்களில் மாயா நடித்துள்ள நிலையில், அவருக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங்? ராஜ்கமல் நிறுவனத்துக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்றே தெரியவில்லை. அடுத்தடுத்த படங்களில் அவரை கமிட் செய்திருக்கலாம். அதனால் தான் கமல்ஹாசன் அடக்கி வாசிக்கிறாரோ என தெரியவில்லை” என்று சுசித்ரா பேசியுள்ளார்.