இலங்கையில் செப்ரெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி புதன்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

