சமூக ஊடகங்களில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அழுத்தங்களை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் முடியாமற் போயுள்ளது.
சமூக வலைதளம் தொடர்பில் எதிர்காலத்தில் அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சட்டங்களுக்கு இணங்குவதாக இணையத்தள சேவைகளை வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் தமது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
மெட்டா , டிக்டொக், ஸ்னெப், டிஸ்கோர்ட், மற்றும் டுவிட்டர், என இனங்காணப்படும் தற்போதைய எக்ஸ் , உள்ளிட்ட பிரதான சமூக ஊடக நிறுவனங்கள் ஐந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்று அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸ் சபை நீதிமன்றக் குழுவிடம் கடந்த (31.02.2024) அழைக்கப்பட்டு, இதன் நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே மேற்படி அதிகாரிகள் தமது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி குழுவில் சமூக ஊடகங்களின் மூலம் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்படும் பாதிப்புகளை இல்லாதொழிப்பதற்கு இவர்களால் சுயாதீனமாக முடியாமற் போயுள்ளதால் எதிர்காலத்தில் அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சட்டங்களுக்கு இணக்கம் தெரிவிப்பதாக இந்நிறுவனங்களின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.