2,5000 போதை மாத்திரைகளுடன் கைதான லக்ஷபதியே தம்மா!

0
152

போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் நேற்று (21-12-2023) கைது செய்துள்ளனர். மொரட்டுவ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு (OIC) கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை, லக்ஷபதிய, ஜூபிலி வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குள் பொலிஸ் அதிகாரிகள் நுழைந்தவுடன் பின்கதவால் தப்பிச் செல்ல முற்பட்டவேளை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பையில் மொத்தம் 2,500 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் 30 வயதுடைய தம்மிக்க பிரியங்கர என அழைக்கப்படும் ‘லக்ஷபதியே தம்ம’ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2,5000 போதை மாத்திரைகளுடன் கைதான லக்ஷபதியே தம்மா! | 2 5000 Drugs Pills Lakshapthiye Dhamma Arrested

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பு செய்த பின்னர் போதை மாத்திரைகள் தேவைப்படுபவர்கள் அவர்கள் சொல்லும் இடத்தில் விட்டுச் செல்வதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது ​​இந்த மாத்திரைகள் பாடசாலை தொடர்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் இந்த மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.