குருந்தூர் மலை விவகாரம்; மீண்டும் சீண்டும் சரத் வீரசேகர

0
290

இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு அதை எவரும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சிங்கள பௌத்த நாடு

குருந்தூர் மலை விவகாரம்; மீண்டும் சீண்டும் சரத் வீரசேகர | Kurundur Hill Affair Sarath Veerasekara Pisses

இந்நிலையில் அது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விகாராதிபதியிடமும், மறவன்புலவு சச்சிதானந்தத்திடமுமே கேட்க வேண்டும்.

ஆனால், இலங்கை சிங்கள – பௌத்த நாடு எனவே புத்தர் சிலைகளை எங்கும் வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.