கொழும்பில் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியான 2 பிள்ளைகளின் தந்தையே (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய குடும்பஸ்தர்
அக் குடும்பஸ்தர் நேற்று மாலை தனது இரண்டு பிள்ளைகளையும் ஓட்டோவில் பிரத்தியேக வகுப்புக்காக இறக்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அவ்வேளை நால்வர் மற்றுமொரு முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களுடன் வந்து இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்த அக் கும்பல் குடும்பஸ்தரை சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட நபர்
மனைவியின் கண் முன்னால் கணவனைக் அக் கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அயல்வீட்டுக்காரர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கி உள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வட்டிக்குப் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.