வாயை மூடிக்கொண்டு இருங்கள்; சபாநாயகரை வசைபாடிய பெண் எம்.பியால் சபையில் குழப்பம்

0
54

இன்று (23) காலை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களை தொடர்ந்து வாய் மூல விடைக்கான வினாக்களின் போது சபாநாயகரை “வாயை மூடுங்கள்” என ரோஹினி கவிரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட கருத்து காரணமாக நாடாளுமன்றத்தில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. கேள்வியைக் கேட்க எம்.பி. 4 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன் போது “வாயை மூடிக்கொண்டு கேளுங்கள்” என்று ரோஹினி கருணாரத்ன கூறியதால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது.