தலதாவுக்கு அடுத்தபடியாக காவிந்த ஜயவர்தன! சூடுபிடிக்கும் அரசியல் களம்

0
153

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரள நேற்றையதினம் (21-08-2024) விலகிய நிலையில் தற்போது காவிந்த ஜயவர்தன விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கயந்த கருணாதிலக்க, கபீர் ஹாசிம், அலவத்துவல, அங்கஜன் போன்றோரின் பெயர்களும் ரணில் பக்கம் போவோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ரோஹித அபேகுணவர்தன ரணில் பக்கமிருந்து நாமல் ராஜபக்ச பக்கம் வர முயற்சிப்பதாகவும், இன்னமும் நாமல் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.