கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வருகை முனையத்திற்கு வெளியே உள்ள பகுதியில் சாரதிகள் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விமானப் பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் அனைத்து வாகனங்களும் உரிய வாகன தரிப்பிடங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரமே விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு பிரவேசிக்க வேண்டும் எனவும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கட்டிய அறிவித்துள்ளார்.
