கரூர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு – பதறும் திமுக தலைமைகள்

0
48

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவு இன்று (13) நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   இருப்பினும் குறித்த அதிகாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை தொடர்பாக மாதம் தோறும் நீதிபதி குழுவிடம் சிபிஐ அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் வழக்கை SIT இற்கு மாற்றிய வழக்கை கிரிமினல் ரிட் வழக்காக விசாரித்தது எப்படி என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் கேரரியுள்ளது.  

கரூரில் கடந்த மாதம் 27 திகதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் (Vijay) பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நிதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு செய்திருந்தார். அத்தோடு கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கோரியும் பாஜக மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கரூர் கூட்ட நெரிசலை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த அடிப்படையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.