இலங்கையிலுள்ள காலணி நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காலணிகள் கொழும்பு – வெள்ளவத்தையிலுள்ள காலணி நிறுவனமொன்றின் காட்சியறையிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை மலர்கள் தமிழர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும், குறித்த காலணிகளை மீளப் பெற வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களினூடாக தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
