வெறித்தனமான லுக்கில் கமல்; வைரலாகும் புதிய போஸ்டர்!

0
236

முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனின் மிரட்டும் கண்கள் மட்டும் தெரியும் புதிய போஸ்டரை கே.எச்.234 படக்குழு வௌியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கே.எச்.234 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட காட்சி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.