களனி மக்களோடு வந்து புலம்பெயர் தமிழர்களை விரட்ட நேரிடும்! மேர்வின் சில்வா பகிரங்க எச்சரிக்கை

0
288

இது சிங்கள பௌத்த நாடே இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும் அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும் அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.