கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம்; தமிழகத்தில் ஜீவன்

0
243

தமிழகம் சென்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமாக விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கொள்ளையர்களைப் பயன்படுத்தி தமிழக மீனவர்களை தாக்க வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.