வன்முறைப் புரட்சியில் ஜே.வி.பி.க்கு வேரூன்றிய வரலாறு: தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் கவலை

0
120

2022 ஆம் ஆண்டு அரகலயவின் பின்னணியில் ஜே.வி.பி இருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நந்தன குணதிலக்க, அந்தக் கட்சியிலிருந்து விலகி தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகிறார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஜே.வி.பி.க்கு வன்முறைப் புரட்சியில் வேரூன்றிய வரலாறு உள்ளது. நீண்ட காலமாக ஜே.வி.பி ஒரு கல்லைக் கூட எறியவில்லை. ஆனால் 2022 ஆம் ஆண்டில் ஜனநாயக விரோத வன்முறை மீண்டும் தலைதூக்கியது.

தேசிய மக்கள் சக்தியின் சுனில் ஹந்துநெத்தி மற்றும் கே.டி. லால்காந்த ஆகியோரே வன்முறையைத் தூண்டினர். தேசிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அவர்கள் நாட்டில் வன்முறையைத் தூண்டலாம் என்ற கவலை உள்ளது.