மின்சார சபை ஊழியர்களின் பணத்தில் கார் வாங்கிய ஜே.வி.பி: சாடும் பாட்டலி

0
33

இலங்கை மின்சார சபை ஊழியர்களிடம் இருந்து ஜே.வி.பி தொழிற்சங்கத்திற்காக 205 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் அதாவது வருடத்திற்கு இரண்டு கோடிக்கு மேல் ஜே.வி.பியின் தொழிற்சங்கம் பெற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அந்த பணம் முழுதும் கட்சிக்கே சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சியில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த நிகழ்ச்சியில் மேலும் கருத்து தெரிவித்த அவர் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அண்மித்த காலத்தில் மின்சார சபையிலுள்ள 6000 தொழிலாளர்களை நிரந்தமாக்குவதற்காக சத்தியாக்கிரகம் போராட்டடம் ஒன்றை நடத்திய ஜே.வி.பி தொழிற்சங்கம் அதன் பின்னர் குறித்த 6000 பேரிடமும் நாங்களே உங்களை நிரந்தரமாக்கினோம் என்று கூறி ரூபா5,000 முதல் 10,000 வரை ஒரு பணியாளரிடமிருந்து அறவிட்டுள்ளனர்.

அந்த பணத்தில் தொழிற்சங்க தலைவருக்கு ரஞ்சன் ஜெயலாலுக்கு கார் ஒன்று தேவையென கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளனர். இப்போது அவர் கடுவளை மாநகர சபையின் மேயராக உள்ளார்.

இந்த பணம் அறவிட்டமை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பியும் தெரிவித்திருந்தார்.அதாவது தங்களின் ஆட்சி காலத்தில் நிரந்தரமாக்கப்பட்ட 6000 ஊழியர்களிடம் ஜே.வி.பி தொழிற் சங்கமே இதை செய்து கொடுத்ததாக 5000 முதல் 10000 ரூபா அறவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் கடுவளை மாநகர சபை மேயர் ரன்ஞன் ஜயலாலுடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் கதைத்தபோது பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதம் ஏற்பட்ட தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அக்கலந்துரையாடலில் கார் வாங்கிய கதையும் பேசப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.