ஒரே ஒரு லைக்ஸ்; த்ரிஷா அம்மா செயலால் மீண்டும் பேசுபொருளான திருமண விவகாரம்!

0
23

இன்ஸ்டாகிராமில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் உடன் த்ரிஷா திருமணத்திற்கு வந்த வீடியோவிற்கு த்ரிஷாவின் தாயாரான உமா கிருஷ்ணன் லைக்ஸ் செய்துள்ளதாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் உண்மையாகவே விஜய்க்கு த்ரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனது முதல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 4 ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு 3 நாட்கள் முன்னதாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இதனையடுத்து திருமண நிகழ்வு ஒன்றுக்கு விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஒரே நிற உடை அணிந்து ஒன்றாக கலந்து கொண்டனர். இது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒரு சிலர் கடந்து சென்றாலும், இது அவரது அரசியலை பாதிக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷாவை தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் மற்றும் த்ரிஷா திருமணத்திற்கு ஒன்றாக வரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றில் தாலி கட்டுவது உறுதி திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எழுதப்பட்டுள்ளது.

இந்த ரீல்ஸுக்கு த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் லைக்ஸ் செய்துள்ளதாக புகைப்படம் வெளியாகி உள்ளது. எனினும் அது தவறுதலாக கை பட்டு லைக் ஆகி இருக்கலாம் என்றும் தற்போது லைக்ஸ் பட்டியலில் அவரது பெயர் இல்லை எனவும் ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.