ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள்

0
722

சர்வதேச ஊடக சுதந்திர தினமான நேற்று (மே 03) கொழும்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் சிலைக்கு முன்னால் ஒன்றுகூடிய இளம், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர். அவர்கள், ஜனாதிபதி செயலகம் முன் நீதி வேண்டிக் கோஷங்களை எழுப்பிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் மதகுருமார்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.