சமூக வலைத்தள பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல்

0
379

2019 இல் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட பிரகடனம் தொடர்பிலும், அதில் மேலும் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.09.2023) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்

நாட்டின் ஊடக நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அடங்கலாக 19 அமைப்புக்கள் கையெப்பமிட்டுள்ள சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் தொடர்பில் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் ஊடகவியலாளர்கள், சமுக ஊடக செயற்பாட்டாளர்களுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

சமூக வலைத்தள பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் | Social Media Amendment Meeting Journalist

சமூக வலைத்தளங்களை பொறுப்பு மிக்க விதத்தில் பயன்படுத்துவதற்கான ஒழுக்க நெறிக்கோவையை மேலும் மேம்படுத்தும் முகமாக, பொறுப்புணர்வுடன் கூடிய விதத்தில் சமூக வலைத்தளங்களின் பாவனையை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் தகவல் துறை தொடர்பான அறிவினை பயன்படுத்துதல்.

சாணக்கியன் மீதான தடை தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்

மற்றும் டிஜிட்டல் உரிமைகள் சமூக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான மனித உரிமைகளுடன் இயற்கையாகவே இணைந்து இருப்பதுடன், பிரித்து வேறுபடுத்த முடியாத அளவுக்கு அந்த உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு அங்கீகரித்தல், போன்ற பல விடையங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறான கலந்துரையாடல்கள், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தள பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் | Social Media Amendment Meeting Journalist

இந்நிகழ்வில் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் ஆய்வாளரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான சம்பத் சமரக்கோண், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவஅதிரன் அகியோர் கலந்து கொண்டு கருத்துக்களையும் விளக்கங்களையும் வழங்கியிருந்தனர். 

சமூக வலைத்தள பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் | Social Media Amendment Meeting Journalist