பகலில் பத்திரிகை நிருபர் – இரவில் ஹமாஸ் தளபதி; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த முகமது வஷா

0
183

இஸ்ரேல் பாதுகாப்பு படையானது பகலில் நிருபராகவும் இரவில் ஹமாஸ் அமைப்பின் தளபதியாகவும் செயல்பட்ட முகமது வஷா என்ற நபரை அடையாளம் கண்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு காசா முனையின் மத்திய பகுதியில் நடந்த அதிரடி நடவடிக்கையில், அவருடைய மடிக்கணினி ஒன்றை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பீரங்கி அழிப்பு படை பிரிவின் தளபதி

குறித்த மடிக்கணினியில் காணப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து அவர், சர்வதேச பத்திரிகையின் நிருபராகவும், ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதியாகவும் செயல்பட்டு வருகிறார் என தெரிய வந்துள்ளது.

பகலில் பத்திரிகை நிருபர் - இரவில் ஹமாஸ் தளபதி: அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் | Israel Hamas War

இது தொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் லெப்டினென்ட் கர்னல் மற்றும் அரபிக்கான செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறும்போது, ‘சமீப மாதங்களாக அவர் பத்திரிகையாளராக செயல்பட்டார்.

பகலில் பத்திரிகை நிருபர் - இரவில் ஹமாஸ் தளபதி: அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் | Israel Hamas War

ஆனால், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதன்படி, ஹமாஸ் அமைப்பின் பீரங்கி அழிப்பு படை பிரிவின் முக்கிய தளபதியாக இருந்திருக்கிறார்.

அந்த அமைப்பிற்கான விமான பிரிவுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவில் 2022ஆம் ஆண்டு இறுதியில் பணியாற்றி வந்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.