அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தை ஆய்வு செய்வதற்கு ஜோ பைடன் சென்ற வேலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் பாதிப்பு பற்றி பேட்டி அளித்துள்ளார்.
அதாவது “என்ன செய்வதென்றே தெரியாமல் அம்மா எங்களை வளர்த்தார். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் கழிவுகள் எங்கள் வீடு ஜன்னல்களில் ஒடி கொள்ளும். அதை சுத்தம் செய்ய வைபரை ஜன்னல்களில் வைத்திருக்க வேண்டும் அதனால் தான் நான் மற்றும் பலர் புற்று நோயுடன் வழர்ந்தோம் நாட்டிலேயே நாங்கல் வசித்த டெலாவேர் பகுதி தான் அதிக புற்று நோய் விகிதம் கொண்ட பகுதியாக இருந்தது” என கூறினார்.

அதிபர் ஜோ பைடனின் இந்த பேச்சு அமெரிக்கா மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பலரும் ஜோ பைடன் புற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட தொடங்கினர்.
இந்த விவகாரம் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமெரிக்கா வெள்ளைமாளிகை இது தொடர்ந்து விளக்கம் அளித்துள்ளது.
அதில் “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்பு தோல் புற்று நோய் பாதிப்பு இருந்ததாகவும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அதிபராக பதவி ஏற்றதற்கு முன்பாகவே முறையான சிகிச்சை பெற்று அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.”