பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என குற்றம் சுமத்தப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அவர் இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை விட்டு வெளியேறிய ஜெரோம்
கட்டார் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்க வேண்டும்.
இதேவேளை, ஜெரோம் பெர்னாண்டோ நாட்டுக்கு வரும் போது அவரை கைது செய்ய வேண்டாம் எனவும் அவர் இலங்கை வந்ததும், 48 மணி நேரத்திற்குள் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறும் சிஐடிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.