ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று அவர் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித் தலைமை மற்றும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். புதிய எல்டிபியை பொதுமக்களுக்கு தெளிவான முறையில் வழங்குவது அவசியம்” என்று கிஷிடா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“எல்டிபி மாறும் என்பதைக் காண்பிப்பதற்கான மிகத் தெளிவான வழி, நான் பதவி விலகுவதுதான்.” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கிஷிடா அக்டோபர் 2021 இல் பதவியேற்றார், யோஷிஹிட் சுகாவுக்குப் பிறகு புதன்கிழமை வரை 1,046 நாட்கள் பணியாற்றினார். முன்னாள் பிரதம மந்திரி நோபுசுகே கிஷிக்குப் பிறகு போருக்குப் பிந்தைய காலத்தில் எட்டாவது நீண்ட பிரதமராக அவர் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.