பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நீதிமன்றம் என்னும் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. இந்த டாஸ்க்கின்படி பலரும் தங்களுக்கு சரியில்லை எனத் தோன்றும் விடயங்கள் குறித்து வழக்கு தொடுக்க, அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தனலட்சுமி அசீம் மீது புதிய வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். அதில், அசீம் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் பழங்களை தானே எடுத்து சாப்பிட்டு விடுவதாகவும் அதனை விசாரிக்கும்படியும் கூறியிருந்தார்.
அதில் தனலட்சுமி தொடுத்த வழக்கில் மைனா நந்தினி நீதிபதியாக செயல்படுகிறார். அசீமுக்காக ஜனனி வாதாடுகிறார்.

அப்போது, தனலட்சுமிக்காக ஆஜராகும் கதிரவன், “இரவு நேரத்தில் பழங்கள், தயிர் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டு விடுகிறார். மற்றவர்களுடையதையும் எடுத்து சாப்பிடுறாரு, அதுதான் இங்க கேஸ்” என்கிறார். இதை கேட்டு நீதிபதியாக இருக்கும் மைனா உட்பட பலரும் சிரித்து விடுகின்றனர்.

தொடர்ந்து, அசீமுக்காக ஜனனி வாதாடுகிறார். அப்போது,”அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என் கட்சிக்காரர்?” எனச் சொன்னதும் அசீமே சிரித்துவிடுகிறார்.
தொடர்ந்து, “பழங்கள் வீணாக போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே அவர் அப்படி செய்தார்” என்கிறார்.
இதைக்கேட்டு மொத்த நீதிமன்றமும் கலகலத்துபோகிறது. இவ்வாறு தொடரப்பட்ட கேசில் அசீம் மற்றும் ஜனனி டீம் ஜெயித்து விட்டது.

இதனால் ஜெயித்த டீமுக்காக மாலை அணிவித்து ஆரத்தி எடுக்கும் போது அவர் தனலக்ஷ்மி கதிர் ஆகியோரையும் தம்மிடம் சேர்த்துக் கொள்கின்றனர். அப்போது ராபர்ட் மாஸ்டர் என்ன இது என்று கேட்கிறார்.
அதற்கு ஜனனி விடுங்க மாஸ்டர் நாங்க புதுசா செய்யிறமே ஏன் எல்லோரையும் பிரிச்சு பிரிச்சு பார்ப்பான் என்று கேட்டுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.