அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த யாழ் பிரதிநிதி!

0
564

அரச வேலை பெற்றுத் தருவதாக் கூறி பெண்ணொருவரிடம் தகாத உறவுக்கு அழைத்ததுடன் 50 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கோரிய இருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல இன்று (07) உத்தரவிட்டார்.

அரசியற் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த யாழ் பிரதிநிதி! | Jaffna Representative Who Invited The Woman

உணவகத்தில் பணபரிமாற்றம்

குறித்த பெண்ணை 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வருமாறு அறிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் அந்தப் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு அளித்துள்ளார்.

அத்துடன் பெண்ணிடம் புறக்கோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து பணத்தைப் பெற முயன்ற போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது. இந்நிலையிலேயே சந்தேக நபர்களுக்கு மேற்படி உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த யாழ் பிரதிநிதி! | Jaffna Representative Who Invited The Woman