யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த தில்லு முல்லு; அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்

0
162

சட்டத்தின் படி தற்போதும் நான் தான் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைக் கூறியுள்ளார். குறித்த காணொளியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வைத்தியர் சமன் பத்திரன, யாழ்ப்பாண தமிழ் சமூகத்தை குழப்பும் வகையிலான அரசியல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்.

இப்படியான புள்ளிகளால் தான் தமிழ் சமூகத்துக்கு அழிவு ஏற்பட்டது. சமூக மருத்துவத்தில் (Community Medicine) பட்டம் பெற்ற வைத்தியரான கோபாலமூர்த்தி ரஜீவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக சமன் பத்திரன நியமித்துள்ளார். ஆனால் அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை” என தெரிவித்துள்ளார்.