யாழ்ப்பாணம் திருவடிநிலை கடலிலிருந்து சடலம் மீட்பு!

0
434
Dead body in a mortuary

யாழ்ப்பாணம் –  மாதகல்  திருவடிநிலை கடலிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறால் தொட்டிலில் சடலம் 

திருவடிநிலை கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள இறால் தொட்டிலில் சடலம் காணப்பட்டதாகவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.