யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்களால் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடரேற்றி ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இனபேதமின்றி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




