யாழ். இருபாலையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த சிறுவர்கள் மீட்க்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் 3 சிறுவர் இல்லங்கள் தொர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 3 சிறுவர் இல்லங்கள் தொர்பாக விசாரணை
இருபாலையில் கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சட்டவிரோத சிறுவர் இல்லம் ஒன்று முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த 13 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுவர் இல்லத்திற்கு அருகில் மற்றொரு சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாகவும் அதேபோல் குறித்த கிறிஸ்தவ மத அமைப்பினால் நடத்தப்படும் மேலும் இரு முன்பள்ளிகள் கிளிநொச்சியில் இயங்குவதாகவும் கூறப்படுகின்றது.

பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சிறுவர் இல்லங்களுக்கான அனுமதிகள் உரிய முறையில் பெறப்பட்டு உள்ளனவா? அங்குள்ள சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்பது போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.